உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு

சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்,: உத்திரமேரூரில் விவசாய நிலங்கள், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக, பட்டாங்குளம் - கடல்மங்கலம் சாலையோரம், மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன.இதில், அப்பகுதி விவசாய நிலத்தை ஒட்டியுள்ள ஒரு மின்கம்பம், சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்தால், மின்கம்பம் முற்றிலும் சாய்ந்து விழுந்து, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால், இப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்று விவசாய பணியை மேற்கொள்ளும் விவசாயிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.பட்டாங்குளம் - கடல்மங்கலம் சாலையில், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை