உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மதுபாட்டில் கடத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது

மதுபாட்டில் கடத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில், சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, வாலாஜாபாத் பகுதியில் போலீசார், நேற்று காலை வாகன தணிக்கை செய்தபோது, அவ்வழியே வந்த 'மாருதி ஸ்விப்ட்' காரை சோதனை செய்தனர். காரில் ஏராளமான மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.விசாரணையில், கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இம்மானுவேல்,49, என்பதும், ஓரிக்கை பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருவதும் தெரிந்தது.இதையடுத்து, புதுச்சேரியிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட, 66 மதுபாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்து, இம்மானுவேலை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ