உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுபால தடுப்புச்சுவர் சீரமைக்க வலியுறுத்தல்

சிறுபால தடுப்புச்சுவர் சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் நாகலுாத்து மந்தைவெளி தெருவில், ஓரிக்கை அரசு நகருக்கு இடையே உள்ள வேகவதி ஆற்றின் குறுக்கே தடுப்புச்சுவருடன் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.கடந்த 2022ல், வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, மந்தைவெளி சிறுபாலத்தின் வழியாக வெள்ள நீர் வெளியேற தடுப்புச்சுவர் தடையாக இருந்தது. இதையடுத்து பாலத்தின் தடுப்புச்சுவரின் ஒரு பகுதி வெள்ளநீர் தடையின்றி வெளியேறும் வகையில் இடிக்கப்பட்டது.ஆனால், இரு ஆண்டுகளாகியும் இடிக்கப்பட்ட தடுப்புச்சுவர் மீண்டும் சீரமைக்கவில்லை. இதனால், பாலத்தின் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, வேகவதி ஆற்று பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சிறுபாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ