உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜே.சி.பி., திருடிய எட்டு பேர் கைது

ஜே.சி.பி., திருடிய எட்டு பேர் கைது

ஸ்ரீபெரும்புதுார் : காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டியைச் சேர்ந்தவர் அரவிந்தன், 32. ஜே.சி.பி., மற்றும் லாரி வைத்து, சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.கடந்த 12ம் தேதி இரவு அவரது வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி., வாகனம் காணாமல் போனதாக ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து தேடி வந்தனர். பண்ருட்டி அடுத்த வேண்பாக்கத்தைச் சேர்ந்த ஜளபதி, 35, ஜே.சி.பி.,யை திருடி சென்று, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் விற்பனைக்காக கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.அதன்படி, பிரபு, 39, மற்றும் ஜளபதியை கைது செய்த போலீசார், இதில் தொடர்புடைய அருண்குமார், 26, கணேஷ்குமார், 34, வேலு, 38, உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலுர் மாவட்டம் பெருமுகை பகுதியில் இருந்து வாகனத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை