உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த சிறுபாலம் சீரமைக்க கடல்மங்கலத்தினர் வலியுறுத்தல்

சேதமடைந்த சிறுபாலம் சீரமைக்க கடல்மங்கலத்தினர் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில், 30க்கும், மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருவில் குறுக்கே, மழைநீர் வெளியேறும் வகையில், 10 ஆண்டுகளுக்கு முன், மழைநீர் வடிகால்வாயுடன் இணையும் வகையில், சிறுபாலம் கட்டப்பட்டது.இந்நிலையில், இரு மாதத்திற்கு முன், கட்டுமான பொருட்களுடன் இவ்வழியாக கனரக வாகனம் சென்றபோது, சிறுபாலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்து உடைந்து விட்டதாக இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.இதனால், இவ்வழியாக இருசக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சிறுபாலம் சேதமடைந்த பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சேதமடைந்த சிறுபாலத்தை இடித்துவிட்டு, புதிதாக சிறுபாலம் அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை