உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புகார் பெட்டி

காஞ்சி புகார் பெட்டி

சிமென்ட் சாலை வசதி ஏற்படுத்தப்படுமா?காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, சுவர்ணா நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ராஜேஸ்வரி தெருவிற்கு சாலை வசதி ஏற்படுத்தவில்லை. மண் சாலையாக உள்ளதால், சாதாரண மழைக்கே சாலையில் குளம்போல மழைநீர் தேங்கி சகதி சாலையாக மாறிவிடுகிறது.மழைநீர் வற்றினாலும், சகதியாக இருப்பதால், இச்சாலையில் செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே,போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள ராஜேஸ்வரி தெருவிற்கு சிமென்ட் சாலை வசதி ஏற்படுத்த, கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.கதிரவன்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி