உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக செல்லும் மின் ஒயர்கள் பல்லவர்மேடில் மின்விபத்து அபாயம்

தாழ்வாக செல்லும் மின் ஒயர்கள் பல்லவர்மேடில் மின்விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவர்மேடு மேற்கு 2வது குறுக்கு தெருவில், 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க இரு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு கம்பத்தில் இருந்து மற்றொரு கம்பத்திற்கு தெரு மின்விளக்கிற்கு மட்டும் இரு மின்ஒயர் அமைக்கப்பட்டுள்ளது.வீட்டு இணைப்பிற்கான மூன்றாவது மின் ஒயர் பொருத்தப்படவில்லை. இதனால், 30 மீட்டர் துாரத்தில் உள்ள மின்கம்பத்தில் வீட்டிற்கான சர்வீஸ் ஒயர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், சர்வீஸ் ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. கட்டுமானப்பணிக்காக வரும் வாகனங்கள் மின் ஒயரில் உரசினால் மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், மழைக்காலத்தில் காற்றடிக்கும்போது அடிக்கடி வீட்டு இணைப்பு சர்வீஸ் ஒயர் அறுந்துவிழுந்து விடுகிறது.எனவே, இரண்டாவதாக அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில் வீட்டு மின்இணைப்பு சர்வீஸ் ஒயரை இணைக்கும் வகையில், மூன்றாவது மின்ஒயர் பொருத்த மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் நகர உதவி செயற்பொறியாளர் இளையராஜன் கூறியதாவது:காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில், வீட்டு மின் இணைப்பு சர்வீஸ் ஒயர்கள் தாழ்வாக செல்கிறது. இதுகுறித்து, அப்பகுதி, மின்வாரிய உதவி பொறியாளரை சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, மின்ஒயர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ