உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் விழுந்த மின்கம்பத்தால் ஸ்ரீபெரும்புதுாரில் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் விழுந்த மின்கம்பத்தால் ஸ்ரீபெரும்புதுாரில் வாகன ஓட்டிகள் அச்சம்

ஸ்ரீபெரும்புதுார், : சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, சர்வீஸ் சாலையில் விழுந்த மின் கம்பத்தால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சென்றனர்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது, ஆறுவழிச் சாலையாக விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வடமங்கலம் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பத்தின் மீது, அடையாளம் தெரியாத வாகனம் நேற்று மோதியதில் கம்பம் சர்வீஸ் சாலையில் விழுந்தது.இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சாலையின் நடுவே விழுந்த மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்படுட்டு விடுமோ என அச்சத்திலேயே சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை