| ADDED : மே 23, 2024 11:12 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாமல்லன் நகர், கே.டி.எஸ்., மணி தெருவில், இரு மாதங்களுக்கு முன் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பை சீரமைத்த காஞ்சிபுரம் மாநகராட்சி குடிநீர் பிரிவு ஊழியர்கள், பள்ளம் தோண்டிய இடத்தை சீரமைக்கவில்லை.இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.அதேபோல, இரவு நேரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகளும் பள்ளத்தில் தவறி விழும் நிலை உள்ளது.எனவே, குடிநீர் சீரமைப்புக்காக சாலையோரம் பள்ளம் தோண்டிய இடத்தை காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.