மேலும் செய்திகள்
புத்தேரியில் குடிநீர் நிரப்பாததால் வீணாகும் கால்நடை தொட்டி
15 hour(s) ago
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் இருந்து, பல்வேறு கிராமங்கள் வழியாக சாலவாக்கம் செல்லும் சாலை, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில்உள்ளது.அருங்குன்றம், பட்டா, சிறுதாமூர், பழவேரிஉள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இச்சாலையை பயன்படுத்தி, திருமுக் கூடல் மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதி களுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையில், மதூர் கூட்டுச்சாலை துவங்கி, அருங்குன்றம் செல்லும், 1 கி.மீ., துாரம் வரையிலான சாலையோரத்தில், பல்வேறு மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் சாலையில் படர்ந்து உள்ளதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடமுடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.மேலும், இச்சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவில் வாகன ஓட்டிகளின் உடலை மரங்கள் பதம் பார்க்கின்றன.எனவே, அருங்குன்றம் சாலையில் படர்ந்துள்ள மரங்களை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
15 hour(s) ago