உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் தமிழக சிறுவர்கள் வரலாற்று சாதனை

தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் தமிழக சிறுவர்கள் வரலாற்று சாதனை

சென்னை, : தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில், கடந்த 21ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.இதில், 7 - 9 வயதினருக்கான சிறுவர்கள் மற்றும் 10 - 15 வயதினருக்கான 'கேடட்' ஆகிய இரு பிரிவினருக்கான போட்டிகள் மட்டும் நடந்தன. பாயின்ட் பைட்டிங், லைட் காண்டாக்ட், கிக் லைட் உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.போட்டியில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், 102 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர். அனைத்து போட்டிகள் முடிவில், சிறுவர்களில் தமிழக அணி, 14 தங்கம், ஒன்பது வெள்ளி, ஏழு வெண்கலப் பதக்கங்களை வென்று, வரலாற்றில் முதல் முறையாக பலம் வாய்ந்த மஹாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.அடுத்தடுத்த இடங்களை முறையே, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் அணிகள் கைப்பற்றின. அதேபோல் 'கேடட்' பிரிவில், தமிழக அணி, 26 தங்கம், ஆறு வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தை பிடித்தது. மஹாராஷ்டிரா முதலிடத்தையும், ஹரியானா மூன்றாவது இடத்தையும் கைப்பற்றி அசத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி