காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெருவில், காமாட்சியம்மன் உடனுறை பணாமணீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 14ம் தேதி 9வது ஆண்டு மாணிக்கவாசகர் குரு பூஜை விழாவில், 108 திருவிளக்கு பூஜை, 108 பால்குட விழா, குடை உற்சவம் மற்றும் 1 லட்சம் ருத்ராட்சத்திலான தேர் பவனி விழா நடைபெறுகிறது.விழாவையொட்டி 14ம் தேதி காலை 6:00 மணிக்கு இடப கொடியேற்றமும், தொடர்ந்து திருவாசகம் முற்றோதல், சிற்றுண்டி வழங்குதலும், காலை 8:30 மணிக்கு, 1,000 பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவித்தலும், 9:00 மணிக்கு குடை உற்சவம், 108 பால்குட ஊர்வலத்தில், மாணிக்கவாசகர், ஒரு லட்சம் ருத்ராட்சத்தால் தேரில் பவனி வரும் வருகிறார்.பிற்பகல் 12:00 மணிக்கு பாலாபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு அன்னம்பாலிப்பும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7:00 மணிக்கு மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.ரிஷப வாகனம்காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.ஆனி மக நட்சத்திரத்தை முன்னிட்டு, மாணிக்கவாசகர் குரு பூஜை விழா நேற்று முன்தினம், மாலை 3:00 மணி அளவில் ஞானசேகர் என்பவரின் திருவாசக விண்ணப்பம்.நேற்று முன்தினம், மாலை 5:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, ரிஷப வாகனத்தில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மாணிக்கவாசகர் வீதியுலா வந்தார்.