உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

ஸ்ரீபெரும்புதுார்,: திருவள்ளூர் மாவட்டம், சிறுபுழல்பேட்டையைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் மாலை, 'மகேந்திரா' வேனில், காவேரிப்பாக்கம் அருகில் உள்ள பெரும்புலிப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றனர்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும்போது, வேனின் டயர் திடீரென பஞ்சர் ஆனது. இதனால், வேனை சாலையோரம் நிறுத்தி, டயரை மாற்றி கொண்டிருந்தனர்.அப்போது, சென்னை நோக்கி வந்த 'ஈய்ச்சர்' லாரி, நின்று கொண்டிருந்த வேனின் மீது மோதியது. இதில், சிறுபுழல்பேட்டையைச் சேர்ந்த சீனிவான், 50, என்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் சிறு காயமடைந்தனர்.அக்கம்பக்கத்தினர் சீனிவாசனை மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ