உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத்தில் இயற்கை வேளாண் பயிற்சி முகாம்

வாலாஜாபாத்தில் இயற்கை வேளாண் பயிற்சி முகாம்

வாலாஜாபாத்:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், இயற்கை வேளாண் சார்ந்த சமுதாய வள பயிற்றுனர்களுக்கான பயிற்சி முகாம் காஞ்சி புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.அதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் ஒன்றியத்தில், மகளிர் திட்ட இயக்குனர் கவிதா தலைமையில் கடந்த 24ம் தேதி துவங்கி, 5 நாட்களாக நடந்தது. இதில், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் யோகா மீனாட்சி, இயற்கைவிவசாயி கோகுல் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், மண் வளம் பாதுகாத்தல்மற்றும் மண் வளம்மீட்டெடுத்தல், பூச்சி நோய்களை கட்டுப்படுத்துதல், இலை, தழை மாட்டு கோமியம் ஊறவைத்து உரம் தயாரித்தல் முறை, நஞ்சில்லா உணவு உற்பத்தி, சுற்றுசூழல் பாதுகாத்தல், ஊட்டச்சத்து மேலாண்மை, மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து பயிற்சியில் விளக்கப்பட்டது.ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் பாரம்பரிய ரகங்கள், அதன் பயன்கள் குறித்தும்எடுத்துரைக்கப்பட்டது.மொத்தம் 30 மகளிர் சமுதாய களப் பயிற்றுனர் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பயனாளிகள் பயிற்சி பெற்றனர். இதில், உதவி திட்ட இயக்குனர் பிரபாகரன். மாவட்ட வள பயிற்றுனர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை