உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிப்பறை பழுது நீக்குவதற்கு பெண் கவுன்சிலர் மனு

கழிப்பறை பழுது நீக்குவதற்கு பெண் கவுன்சிலர் மனு

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பேரூராட்சி 10வது வார்டு ம.தி.மு.க., - கவுன்சிலர் சிவசங்கரி என்பவர், வாலாஜாபாத் தி.மு.க., பேரூராட்சி தலைவர் இல்லாமல்லியிடம், கழிப்பறை பழுது நீக்க மனு அளித்தார். மனுவிபரம்:வாலாஜாபாத் நடேசய்யர் தெருவில், வி.வி., கோவில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் பெண்கள் தடுப்பூசி போடுவதற்கு வருகின்றனர். இந்த கட்டடத்தில் இருக்கும் கழிப்பறை, பழுதடைந்திருக்கும் காரணத்தால் பெண்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளது.இதை, பழுது நீக்கி தர வேண்டும் என, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.எனவே, அங்கன்வாடி மைய கட்ட கழிப்பறையை பழுது நீக்கி தர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை