உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுகாவேரி ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு

சிறுகாவேரி ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பசுமை இந்தியா, 'கிராண்ட்' ரோட்டரி சங்கத்தினர், காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள ஏரிக்கரையை பலப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், ஏரிக்கரைகளில் பனை விதை நடவு செய்துவருகின்றனர்.அதன்படி, நடப்பு ஆண்டு பருவமழை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிபாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்தும் விதமாக பனை விதைகள் நடவு செய்யும் விழா நடந்தது.இதில், பசுமைஇந்தியா, 'கிராண்ட்' ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தன்னார்வலர்கள் இணைந்து, 1,500க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி