மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
7 hour(s) ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஓரிக்கை சதாவரம், கோட்டை காவல் கிராமத்தில், தமிழகஅரசின் கலை பண்பாட்டுத்துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மாணவ - -மாணவியருக்கு பல்வேறு இசை பயிற்சி குரலிசை, நாதஸ் வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசை பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால், அரசு இசை பள்ளியின் கட்டடத்தின் சுவரில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.இச்செடிகளின் வேர்களால் நாளடைவில் சுவரில் விரிசல் ஏற்பட்டு கட்டடம் சேதமடையும் சூழல் உள்ளது.எனவே, மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
7 hour(s) ago