உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் : உலக மக்கள் தொகை தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனம் மற்றும் மருத்துவ செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். இப்பேரணி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கி, காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் முடிந்தது.மேலும், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், இணை இயக்குனர் கோபிநாத், துணை இயக்குனர்கள் மலர்விழி, காளீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை