உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதர் மண்டிய வரத்து கால்வாய்

புதர் மண்டிய வரத்து கால்வாய்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், புல்லம்பாக்கத்தில், 160 ஏக்கர் பரப்பிலான சித்தேரி உள்ளது. இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு, 250 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.வயலக்காவூர் செய்யாற்றில் இருந்து, புல்லம்பாக்கம் ஏரிக்கு வந்து சேரும் வகையில், வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய், புல்லம்பாக்கம் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.மழைக்காலத்தில், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், இக்கால்வாய் மூலம் வந்தடையும் தண்ணீரால் ஏரி நிரம்பி விடும்.இந்நிலையில், வயலக்காவூர் செய்யாற்றில் இருந்து, புல்லம்பாக்கம் ஏரியை வந்தடையும் வரத்து கால்வாய், கடந்த ஆண்டுகளில், வயலக்காவூர் பகுதியில் ஆக்கிரமிப்புக்குள்ளாகி துார்ந்து, கால்வாய் அடையாளம் தெரியாமல் போனது.இதனால், மழைக்காலங்களில் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், புல்லம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வந்தடையாத நிலை உள்ளது. எனவே, வயலக்காவூர் செய்யாற்றில் இருந்து, புல்லம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்க்கான ஆக்கிரமிப்புகளை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை