உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆரம்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்தம் மின்சார பொருட்கள் பழுது

ஆரம்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்தம் மின்சார பொருட்கள் பழுது

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட ஆரம்பாக்கத்தில், 500க்கும் அதிமான வீடுகள் உள்ளன. இங்கு, மூன்று மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் அதிகமாக ஏற்பட்டு வருகின்றது.திடீரென ஏற்படும் மின்னழுத்தத்தால், வீட்டில் உள்ள 'டிவி', மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், மின் மோட்டார், ஏசி, பிரிஜ் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் பழுதாகின்றன. இரவு நேரங்களில் ஏற்படும் மின் அழுத்தம் காரணமாக, குழந்தைகள், வயதானோர் என, அனைவரும் காற்று வசதி இல்லாமல், துாக்கமின்றி தவித்து வருகின்றனர்.அதேபோல, வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட 6வது வார்டு, வஞ்சுவாஞ்சேரி அண்ணா நகரில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் வாயிலாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.தற்போது, அடிக்கடி ஏற்படும் மின் அழுத்தத்தால், மின் மோட்டார்கள் பழுதாகின்றன. இதனால், பொதுமக்கள் குடிநீர் இன்றி, கடைகளில் அதிக விலை கொடுத்து, தண்ணீர் கேன் வாங்கிக் குடித்து வருகின்றனர்.எனவே, படப்பை மின்வாரிய அதிகாரிகள், இங்கு ஏற்படும் மின் பற்றாக்குறையை போக்க, இப்பகுதியில், புதிய மின்மாற்றி அமைத்துத் தர வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ