உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரவில் தொடரும் மின் வெட்டு புதுநல்லுார் வாசிகள் மறியல்

இரவில் தொடரும் மின் வெட்டு புதுநல்லுார் வாசிகள் மறியல்

குன்றத்துார்:குன்றத்துார் அருகே பூந்தண்டலம் ஊராட்சியில், நல்லுார், புதுநல்லுார் கிராமத்தில் 3,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, இரவு - பகல் என, தொடரும் மின் வெட்டு பிரச்னையால் அவதிக்குள்ளாகி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், இரவு 11:00 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. அதன் பின், அதிகாலை 3:00 மணிக்கு மேல் மீண்டும் மின்சாரம் வந்தது. இதனால், இரவு முழுதும் கொசுக்கடி மற்றும் புழுக்கத்தால் பகுதிவாசிகள் துாக்கமின்றி அவதிக்குள்ளாகினர்.இதனால் ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் 30க்கும் மேற்பட்டோர், புதுநல்லுாரில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து பகுதிவாசிகள் கூறுகையில், 'சோமங்கலம் மின் வாரிய எல்லையில் புதுநல்லுார் உள்ளது. இங்கு லேசான மழை பெய்தாலே மின் வெட்டு ஏற்படுகிறது. கூலி வேலை செய்யும் நாங்கள் இரவு நேரத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் துாக்கமின்றி தவிக்கிறோம்; மின் வாரிய அலுவலகதத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை' என்றனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, மறியலில் ஈடுப்பட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதனால், சோமங்கலம் - புதுநல்லுார் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை