உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சம்பங்கி விலை கடும் சரிவு கிலோ ரூ.30க்கு விற்பனை

சம்பங்கி விலை கடும் சரிவு கிலோ ரூ.30க்கு விற்பனை

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் விளையும் சம்பங்கி, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.கடந்த வாரம் முகூர்த்த நாட்களில், காஞ்சிபுரம் பூக்கடைகளில், கிலோ சம்பங்கி 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று திடீரென விலை சரிந்து. கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இதுகுறித்து, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் மொத்தம் மற்றும் சில்லரை பூ வியாபாரிகள் கூறியதாவது:சமீபத்தில் பெய்த மழையால் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பங்கி விளைச்சல் அதிகரித்து, காஞ்சிபுரத்திற்கு வரத்து அதிகரித்துள்ளது.இருப்பினும் முகூர்த்த நாட்கள் இல்லாததால், சம்பங்கி விலை சரிந்துள்ளது. இதனால், கடந்த வாரம் கிலோ, 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பங்கியை, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ