உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இலவச பஸ் பாஸ் பெற 18ல் சிறப்பு முகாம்

இலவச பஸ் பாஸ் பெற 18ல் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி கற்கவும், பணிக்கு செல்வோர் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசு இலவச பயண சலுகை அட்டை வழங்கப்படுகிறது.இதை பெறுவதற்கு, ஜூலை- 18ம் தேதி, காலை 10:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் கல்வி நிறுவன சான்று, வேலைக்கு செல்லும் நிறுவனத்தின் சான்று, போட்டோ ஆகிய ஆவணங்கள் சமர்ப்பித்து இலவச பயண அட்டை பெறலாம்.மேலும், விபரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணில், 044- 29998040-ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை