உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போலி பாஸ்போர்ட் இலங்கை வாலிபர் கைது

போலி பாஸ்போர்ட் இலங்கை வாலிபர் கைது

சென்னை:போலி பாஸ்போர்ட் வழக்கில், இலங்கையைச் சேர்ந்த வாலிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.நிவேதனன், 28 என்பவர், தான் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதை மறைத்து, போலி ஆவணங்கள் வாயிலாக இந்தியா பாஸ்போர்ட் பெற்று, இலங்கை செல்வதற்காக முயற்சி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, சென்னை விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர், போலி பாஸ்போர்ட் புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். நிவேதனிடம், ஆய்வாளர் ரேவதி விசாரணை மேற்கொண்டார். இதில், 2008ம் ஆண்டு இலங்கை பாஸ்போர்ட் வாயிலாக இந்தியாவிற்குள் நுழைந்து, இலங்கையைச் சேர்ந்தவர் என்பதை மறைத்து, போலியாக ஆவணங்களை தயாரித்து, இந்தியா பாஸ்போர்ட் பெற்று மீண்டும் இலங்கை செல்ல முயன்றது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை