உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு பள்ளி வளாகம் நாசம் மாணவ - மாணவியர் அச்சம்

அரசு பள்ளி வளாகம் நாசம் மாணவ - மாணவியர் அச்சம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடில், மஞ்சள் நீர் கால்வாயோரம் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளி கட்டடத்தின் பின்புறம் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், புதரில் தஞ்சமடைந்துள்ள பாம்பு, தேள், பூரான், விஷ பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் செல்லும் சூழல் உள்ளது.இதனால், பள்ளி மாணவ - -மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.எனவே, மாணவ - மாணவியரின் நலன் கருதி, பள்ளி பின்பக்கம் உள்ள ஜன்னலை ஒட்டியுள்ள பகுதியில் மண்டிகிடக்கும் புதர்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்