மேலும் செய்திகள்
ஊராட்சி செயலர் பணிக்கு கீழம்பியில் நாளை நேர்காணல்
23 hour(s) ago
10 ஊராட்சிகளில் நாளை சமூக தணிக்கை கிராம சபை
23 hour(s) ago
சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடிபட்டன
23 hour(s) ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, பட்டா, ஆக்கிரமிப்பு என, 318 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தினார்.முன்னதாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதையில்லா தமிழ்நாடு என உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு பேரணியை, சிறு குறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன், துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சியின் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 320 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், கணினி பிரிவு படிக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேவைப்படும் கணினிகள் பல பழுதாகி உள்ளன. இதனால், கணினி பிரிவு மாணவர்கள் பாதிக்கின்றனர். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், முதன்மை கல்வி அதிகாரி, இப்பள்ளியில் ஆய்வு செய்து, போதிய கணினி உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். கணினி வசதிகளை, மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். என குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago