| ADDED : ஜூன் 12, 2024 02:01 AM
சென்னை:'பழைய தங்க நகைகளின் தரத்தை கட்டணமின்றி ஆய்வு செய்து கொள்ளவும், தங்க பரிமாற்ற திட்டத்தின் கீழ் அதிகபட்ச மதிப்பு பெறலாம்' என, தனிஷ்க் நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை முகவர் சித்ரா தெரிவித்துள்ளார்.டாடா குழுமத்தில், தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், 240 நகரங்களில், 400க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்படுகிறது.தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வரும் நேரத்தில், தனிஷ்க், சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, தனிஷ்க் நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை முகவரான சித்ரா சிவகுமார் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது, 'கோல்ட் எக்ஸ்சேஞ்ச்' பாலிசி வழங்கப்பட்டுள்ளது. பழைய தங்கத்திற்கு அதிக மதிப்பை வழங்குவது மட்டும் அல்லாமல், புதிய வடிவமைப்பை உடைய தங்க ஆபரணங்களாக தரம் உயர்த்திக் கொள்ளலாம்.தங்களின் தங்க நகைகளின் தரம் மதிப்பீட்டிற்கு இங்கு அமைக்கப்பட்டு உள்ள இயந்திரத்திற்கு எவ்வித கட்டணமும் இன்றி நகை விபரங்களை அறியலாம்.எந்த நகை கடையில் இருந்து வாங்கிய தங்க நகையாக இருந்தாலும், அதை தனிஷ்க்கில் வழங்கி, புதிய ஆபரணங்களாக மாற்றிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் அரசு, காஞ்சி கிளை மேலாளர் ரூப் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.