மேலும் செய்திகள்
ஊராட்சி செயலர் பணிக்கு கீழம்பியில் நாளை நேர்காணல்
22 hour(s) ago
10 ஊராட்சிகளில் நாளை சமூக தணிக்கை கிராம சபை
22 hour(s) ago
சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடிபட்டன
22 hour(s) ago
உத்திரமேரூர் : திருமுக்கூடல்- பழையசீவரம் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.திருமுக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து, இந்த பாலத்தின் வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள் இயங்குகின்றன.இதனால், பாலத்தின் துவக்க பகுதியில் லாரிகள் ஒன்றையொன்று கடக்க முடியாமலும், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலையும் ஏற்பட்டது.இதையடுத்து, கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலை நிர்வாகத்தினர், பாலாற்று பாலத்தின் முகப்பு பகுதியில் குறுக்கு சாலை அமைத்து விரிவாக்கம் செய்தனர்.தற்போது, சாலை மிகவும் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால், இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர் எனவே, பாலாற்று பால முகப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago