உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நடத்துனருக்கு தெரியாமல் ஆன்-லைன் முன்பதிவு அரசு போக்குவரத்து கழகத்தில்தான் இந்த கூத்து

நடத்துனருக்கு தெரியாமல் ஆன்-லைன் முன்பதிவு அரசு போக்குவரத்து கழகத்தில்தான் இந்த கூத்து

அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்ய https://www.tnstc.in/ என்ற இணையதளம் உள்ளது.இதன் வாயிலாக கடந்த 2ம் தேதி, ஈரோட்டில் இருந்து மதுரை, மாட்டுத்தாவணி செல்ல, சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த நம்புராஜன் என்ற மாற்றுத்திறனாளி, கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தின் கரூர் பணிமனை தடம் எண்.1054A பேருந்தில், 194 ரூபாய் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தார்.அவர் ஈரோட்டில் பேருந்து ஓட்டுனரிடம், மொபைல்போனில் அந்த முன்பதிவை காட்டியுள்ளார். அதற்கு ஓட்டுனர், அந்த பேருந்தில் முன்பதிவு இல்லையென கூறியுள்ளார்.பேருந்து நேரக்காப்பாளர் மற்றும் பேருந்தின் நடத்துனரிடம் விசாரித்த போது, அவர்களும் அதே பதிலைக் கூறியுள்ளனர்.இதையடுத்து நம்புராஜன், 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து வைத்திருந்த டிக்கெட்டை காட்டியதும், அந்த பேருந்திற்கானது தான் என ஒப்புக் கொண்ட நடத்துனர், இருக்கையில் அமரும்படி கூறியுள்ளார்.பேருந்தில் ஏறிய நம்புராஜன் இருக்கை எண்ணை தேடிய போது, அங்கு எந்த இருக்கையிலும் எண் எழுதப்படவில்லை. வேறு வழியின்றி, காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார்.பின்,'ஆன்-லைன்' வாயிலாக, 194 ரூபாய் கொடுத்து செய்த முன்பதிவிற்கு, 165 ரூபாய்க்கான பயணச்சீட்டை நடத்துனர் வழங்கியுள்ளார்.மாட்டுத்தாவணி வரை முன்பதிவு செய்திருந்தாலும், அந்த பேருந்து ஆரப்பாளையம் வரை தான் செல்லும் என, அங்கேயே அவரை இறக்கி விட்டுள்ளனர்.மாற்றுத்திறனாளியான நம்புராஜன், இந்த பிரச்னையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.நடத்துனர், ஓட்டுனர் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு எந்த அறிவிப்பும் செய்யாமலேயே, 'ஆன்-லைன்' முன்பதிவு நடைமுறையை அரசு எப்படி செயல்படுத்தியது என்பது குறித்து அறிய, போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு நம்புராஜன் கடிதம் எழுதியுள்ளார்.இதையடுத்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் நம்புராஜனை தொடர்பு கொண்டு, 'தவறு நடந்துள்ளது. சரி செய்து விடுகிறோம்' என ஒரே வார்த்தையில் கூறியுள்ளார்.தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் ஏற்பட்ட இதுபோன்ற குழப்பம், நிர்வாக திறமையின்மையைக் காட்டுகிறது.தனியார் பேருந்துகளில், 'ஆன்-லைன்' முறை சரியாக செயல்படுத்தப்படுவது போல, அரசும் திறமையாக செயல்படுத்த வேண்டும் என்பது, சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.-- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை