மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
7 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
7 hour(s) ago
புதுவண்ணாரப்பேட்டை, : கூலித்தொழிலாளியை வெட்டிய சிறுவன் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.புதுவண்ணாரப்பேட்டை, அண்ணா நகர் பிளாட்பாரத்தில் வசித்து வருபவர் சந்துரு, 40; கூலித்தொழிலாளி. இவர் நேற்று, புதுவண்ணாரப்பேட்டை, பீச் ரோடு அருகே நின்றிருந்தார்.அப்போது, அவ்வழியே 'பைக்'கில் வந்த மூவர் கும்பல், சந்துருவை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியது.இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட திருவொற்றியூர், கலைஞர் நகரைச் சேர்ந்த சுரேந்தர், 21, திருவொற்றியூர், சாஸ்திரி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 21, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்தனர்.இதில் மணிகண்டன் மீது, கொலை முயற்சி வழக்கு உட்பட, நான்கு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
7 hour(s) ago
7 hour(s) ago