உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

காஞ்சிபுரம்:ஆந்திரா மாநிலம், தவனம்பள்ளியைச் சேர்ந்தவர் திலீப்குமார். இவர், சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவர், 'யமஹா ஆர்.ஓன்.வைப்' பைக்கில், கடந்த ஏப்., 27ல், சோழிங்கநல்லுாருக்கு சென்றுக் கொண்டிருந்தார். காஞ்சிபுரம் அடுத்த சின்னையன்சத்திரம் அருகே, சிறுநீர் கழிக்க, இரவு 9:00 மணிக்கு, சாலையோரம் பைக்கை நிறுத்தியுள்ளார்.அப்போது, அங்கு வந்த மூன்று இளைஞர்கள், திலீப்குமாரை கத்தியை காட்டி மிரட்டி, அவரது பைக், பேக், லேப்டாப், மொபைல் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.காஞ்சி தாலுகா போலீசில், திலீப்குமார் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக, காஞ்சிபுரம் அருகேயுள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கா, 25, சதீஷ்குமார், 26, அரவிந்த், 24, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி