உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் கண்ணன்தாங்கலில் விபத்து அபாயம்

வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள் கண்ணன்தாங்கலில் விபத்து அபாயம்

கண்ணன்தாங்கல்: பள்ளூர் - சோகண்டி இணைப்பு சாலையில் இருந்து, கண்ணன்தாங்கல் கிராமத்தில் இருந்து, புதுப்பட்டு கிராமம் வழியாக, பண்ணுார் கூட்டு சாலைக்கு செல்லும் பிரதான கிராமப்புற சாலை உள்ளது.இந்த சாலையில், கண்ணன்தாங்கல் தனியார் தொழிற்சாலை அருகே, ஊரக சாலையோரம் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக, கொம்மன்தாங்கல், புதுப்பட்டு, பல்வேறு கிராமத்தைச்சேர்ந்த விவசாயிகள் மற்றும் பல தரப்பு மக்கள் செல்கின்றனர்.இந்த வேகத்தடை மீது வெள்ளை நிறம் வர்ணம் பூசவில்லை. மேலும், ஒளிரும் பிரதிபலிப்பானும் இல்லை.இதனால், பள்ளூர் - சோகண்டி கூட்டு சாலையில் இருந்து, கண்ணன்தாங்கல் செல்லும் வாகனங்கள் மற்றும் பண்ணுார், புதுப்பட்டு, கண்ணன்தாங்கல் கிராமம் வழியாக செல்லும் வாகனங்கள் கவிழும் அபாயம் உள்ளது.எனவே, கண்ணன்தாங்கல் தனியார் தொழிற்சாலை அருகே, வேகத்தடை மீது வர்ணம் மற்றும் ஒளிரும் பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்