உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை

கஞ்சா வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை:காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்க முயன்ற வழக்கில் கைதான ஆந்திர வாலிபர்கள் இரண்டு பேருக்கு, தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி அகரம் பஸ் ஸ்டாப் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற, ஆந்திர மாநிலம், நெல்லுார் மற்றும் கிழக்கு கோதாவாரி பகுதியைச் சேர்ந்த பவன், 21; சாய் பவன் வீர், 21 ஆகியோரை, காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், 2019 ஆக., 8ல் கைது செய்தனர். பின், அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'இரண்டு வாலிபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே, அவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து' தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி