உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாடு முட்டி சிறுமி காயம்

மாடு முட்டி சிறுமி காயம்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோவில் பின் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர்; நடத்துனர். இவரது நான்கு வயது மகள், நேற்று, காலை 8:00 மணி அளவில், வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தார்.அப்போது, நகரில் சுற்றித் திரியும் மாடு ஒன்று, நான்கு வயது சிறுமியை, முட்டியுள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, அவரது தாய், மாடுகளை விரட்டி விட்டு, குழந்தைக்கு முதலுதவி செய்து உள்ளார்.காஞ்சிபுரம் நகரில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல், தெருவில் நடந்து செல்வோருக்கும் ஆபத்தாக உள்ளது என, சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ