சென்னை:தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில், மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிகள், கோவளத்தில் நடைபெற்று வருகின்றன.முன்னதாக, மாணவியருக்கான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று மாணவர்களுக்கான பீச் வாலிபால் போட்டி துவங்கியது.இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட, 38 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயதினருக்கு, தனித்தனியாக நடக்கின்றன.போட்டியில், 19 வயதினரில் ராமநாதபுரம், 21 - 17, 21 - 11 என்ற கணக்கில் விருதுநகரையும், கடலுார், 21 - 5, 21 - 10 கணக்கில் அரியலுாரையும் வீழ்த்தின.அதேபோல், 17 வயது பிரிவில் கிருஷ்ணகிரி அணி, 21 - 10, 21 - 17 என்ற கணக்கில் - காஞ்சிபுரத்தையும், துாத்துக்குடி, 21 - 5, 21 - 15 என்ற கணக்கில் கரூரையும் தோற்கடித்தன.இதேபோல், 19 வயதினர் பிரிவில் சென்னை - வேலுார் அணிகள் மோதின.இதில், 21 - 10, 21 - 15 என்ற கணக்கில், சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்து. மற்றொரு போட்டியில், நெல்லை, 21 - 8, 21 - 14 கணக்கில் தர்மபுரியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.