உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு விரைவு பஸ் மோதி துாய்மை பணியாளர் பலி

அரசு விரைவு பஸ் மோதி துாய்மை பணியாளர் பலி

தாம்பரம் : குன்றத்துார் அடுத்த பழந்தண்டலம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 33. தாம்பரம் மாநகராட்சியில், தற்காலிக துாய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.நேற்று மதியம், 'ேஹாண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் ஜி.எஸ்.டி., சாலை வழியாக, குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்றார்.தாம்பரம், கடப்பேரி அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு விரைவு பேருந்து, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சத்தியமூர்த்தி மீது, பேருந்தின் இடது புற பின்பக்க டயர் ஏறி இறங்கியது. இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சத்தியமூர்த்தி உயிரிழந்தார்.விபத்து ஏற்படுத்திய பேருந்து, அங்கு நிற்காமல் சென்று விட்டது. போலீசார் விரைந்து, உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய பேருந்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி