| ADDED : நவ 18, 2025 04:12 AM
அங்கன்வாடி முன் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் உ த்திரமேரூர் ஒன்றியம், ஆதவப்பாக்கம் கிராமத்தில் நுாலகம் அருகே, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த, 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் முன், அப்பகுதியை சேர்ந்தோர் மாடுகளை கட்டுகின்றனர். பொக்லைன் இயந்திரம் மற்றும் பேட்டரி குப்பை வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால், அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள், விளையாடுவதற்கு போதிய இடம் இல்லாமல் உள்ளது. மாடுகளின் கழிவுகள் அங்கேயே தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆதவப்பாக்கம் அங்கன்வாடி மையம் முன், வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.முத்துராமலிங்கம், உத்திரமேரூர்.