மேலும் செய்திகள்
உழவரை தேடி முகாம்
15-Jul-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை நடைபெற உள்ள, 'உழவரை தேடி வேளாண்' உழவர் நலத்துறை திட்ட முகாமில், விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம் என, வேளாண் இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் வட்டாரத்தில், கோளிவாக்கம், புஞ்சையரசந்தாங்கல், சித்தேரிமேடு, திருப்பருத்திகுன்றம்; வாலாஜாபாத் வட்டாரத்தில், -தண்டலம், நெல்வாய், களியனுார், நத்தாநல்லுார், பெரியமதுரபாக்கம்; உத்திரமேரூர் வட்டராத்தில், சின்னலம்பாடி, மாம்புதுார், பாலேஸ்வரம், களியப்பேட்டை, காவித்தண்டலம், ஒரக்காட்டுபேட்டையில் நாளை காலை 10:00 மணிக்கு, 'உழவரை தேடி வேளாண்' உழவர் நலத்துறை திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. மேலும், ஸ்ரீபெரும்புதுார் வட்டாரத்தில், ஒரகடம் மகாதேவி மங்கலம், பிச்சிவாக்கம், பாப்பாங்குழி, நந்திமேடு, படப்பை, குன்றத்துார் வட்டாரத்தில், கீழகழனி, மாடம்பாக்கம், அமரம்பேடு, ஆகிய கிராமங்களில் நாளை முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில், வேளாண் சான்று பெற வழிமுறைகள், வேளாண் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் மற்றும் சந்தை படுத்துதல் ஆகிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, அனைத்து விவசாயிகளும் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
15-Jul-2025