உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  உயர்கோபுர மின்விளக்கு பழுது: 10 கிராம மக்கள் அவதி

 உயர்கோபுர மின்விளக்கு பழுது: 10 கிராம மக்கள் அவதி

வாலாஜாபாத்: அவளூர் கூட்டுச்சாலையில், உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து ஒளிராமல் உள்ள தால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாலாஜாபாத் பாலாறு தரைப்பாலம் அடுத்து அவளூர் கூட்டுச்சாலை உள்ளது. இக்கூட்டுச் சாலையில் இருந்து, கணபதிபுரம் வழியாக இளையனார்வேலுாருக்கும், கண்ணடியன் குடிசை வழியாக அங்கம்பாக்கத்திற்கு செல்லும் சாலை உள்ளது. அதேபோல, அவளூர் வழியாக ஆசூர், களக்காட்டூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இதனால், பேருந்தில் பயணிப்போர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வேன் வாயிலாக செல்லும் நுாற்றுக்கணக்கானோர், அவளூர் கூட்டுச்சாலைக்கு வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், அவளூர் கூட்டுச்சாலையில் அதிகாலை துவங்கி, இரவு 10:00 மணி வரை பயணியர் கூட்டம் உள்ளது. இப்பகுதியில், காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் உயர்கோபுர மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது. அந்த மின்விளக்கு மூன்று மாதங்களாக பழுதடைந்து ஒளிராமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து பயணியர் அவதிப்படுகின்றனர். எனவே, அவளூர் கூட்டுச்சாலையில் பழுதான உயர்கோபுர மின்விளக்கை சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை