உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சுங்குவார்சத்திரத்தில் சிசிடிவி மையம் திறப்பு

சுங்குவார்சத்திரத்தில் சிசிடிவி மையம் திறப்பு

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரத்தில் குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும், விபத்துகளை உடனடியாக கண்காணிக்கும் வகையிலும், பஜார் பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டது. இதை, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சண்முகம் நேற்று துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது:தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு, 30 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 16 கேமராக்கள் ஏ.என்.பி.ஆர்., தொழில்நுட்ப அதிநவீன கேமராக்கள்.இந்த வகையான, 'சிசிடிவி' கேமராக்கள் வாகன எண்களை துல்லியமாக கண்டறியும். மேலும், இந்த மையத்தில் ஒரு எஸ்.ஐ., இரண்டு காவலர்கள் எப்போதும் பணியில் இருப்பர்.அதை தொடர்ந்து, மாவட்டம் முழுதும் பழுது அடைந்துள்ள, 'சிசிடிவி' கேமராக்கள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்