| ADDED : ஜன 31, 2024 09:51 PM
செம்மஞ்சேரி:பெரும்பாக்கம், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிம்மி, 21. திருநங்கையான இவர், நான்கு நாட்களாக காணவில்லை.கடந்த 28ம் தேதி, ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரியில் உள்ள ஒரு காலி இடத்தில் அழுகிய நிலையில் பலியாகி கிடந்தார். உறவினர்கள் கொலை செய்யப்பட்டார் என, செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்தனர்.விசாரணைக்கு சென்றபோது, காவல் உதவி மைய பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர். இந்நிலையில், திருநங்கை கொலை செய்யப்படவில்லை என, போலீசார், உறவினர்களிடம் கூறி உள்ளனர்.போலீசார் கூறியதாவது:பிரேத பரிசோதனை முதற்கட்ட அறிக்கையில், கழுத்தை நெரித்தோ, காயம் ஏற்படுத்தியோ கொலை செய்யவில்லை என தெரிந்தது. மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். உடலில் விஷம் உள்ளதா என இறுதி அறிக்கையில் தெரியவரும். அப்போது, கொலையா என தெரியவரும்.நண்பர்கள், உறவினர்களிடம் விசாரிக்கிறோம். காவல் உதவி மைய பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக, சிலர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.