உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாங்காடில் ஜன. 24ம் தேதி தெப்ப திருவிழா துவக்கம்

மாங்காடில் ஜன. 24ம் தேதி தெப்ப திருவிழா துவக்கம்

குன்றத்துார், குன்றத்துார் அருகே, மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.தைப்பூசத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் இங்கு தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு தெப்ப திருவிழா வரும் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.இந்த நாட்களில் வெள்ளீஸ்வரர், காமாட்சி அம்மன், சுப்ரமணியர், வைகுண்ட பெருமாள் ஆகியோர் தனித்தனியே தெப்பத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை