உள்ளூர் செய்திகள்

சூதாடிய 17 பேர் கைது

காஞ்சிபுரம் : செங்கல்பட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய, 17 பேரைப் போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு சாரதா லாட்ஜில், சூதாட்டம் நடைபெறுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார், நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்த, பேரம்பாக்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்,38, திம்மராஜபுரத்தை சேர்ந்த சசிக்குமார்,29, கோவிலம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார்,32, கிருஷ்ணமூர்த்தி,30, சென்னை இந்திரா நகரை சேர்ந்த ரமேஷ்,30, காஞ்சிபுரம் நடுத்தெருவை சேர்ந்த மூர்த்தி,39, கூடுவாஞ்சேரியை சேர்ந்த கண்ணன்,34, சென்னை கே.கே.நகரை சேர்ந்த மேகராஜன்,46, உக்கலை சேர்ந்த கார்த்திகேயன்,44, செங்கல்பட்டை சேர்ந்த அருண்குமார்,27, வைத்தியநாதன்,48, குமார்,31, சுந்தர்,34, சந்திரன்,26, ராஜசேகர்,47, வந்தவாசியை சேர்ந்த ஜெயபால்,35, ஜவகர்,25 ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி