| ADDED : ஜன 31, 2024 10:25 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் நகர மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர்வாசிகள் ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, காஞ்சிபுரம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.கோவில் விழா காரணமாக, கோவிலை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், கோவிலை சுற்றியுள்ள எஸ்.எஸ்.கே.வி., பள்ளி, சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளி, பெரிய காஞ்சிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, அந்திரசன் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.மேலும், சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளி, எஸ்.எஸ்.கே.வி.,தொடக்கப் பள்ளி, ஓ.பி.,குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சுப்பராய முதலியார் தொடக்கப் பள்ளி, ராயல் மெட்ரிக் பள்ளி ஆகிய 11 பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுப்பு அளித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.