உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

 அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

உத்திரமேரூர்: திருப்புலிவனம் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. திருப்புலிவனம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் வளாகத்தில், அய்யப்பன் கோவில் கட்ட கிராமத்தினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை கடந்தாண்டு துவக்கினர். தற்போது, பணிகள் முடிக்கப்பட்டு, அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு, விநாயகர் பூஜை, கோ பூஜை, தனபூஜைகள் நடந்தன. காலை 8:00 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு மூல மந்திர ஹோமம் நடந்தது. காலை 9:00 மணிக்கு யாத்ரா தானம், கோவில் பரிகார தெய்வங்கள் வழிபாடு நடந்தது. காலை 9:25 மணிக்கு, யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கலச நீரை, கோவிலுக்குள் எடுத்துச் சென்று, மூலவரான அய்யப்பன் சுவாமி சிலை மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின், அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை