உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இழப்பீடு குறித்து தெரிவிக்க வேண்டும் மேல்பொடவூர் கிராமத்தினர் மனு

இழப்பீடு குறித்து தெரிவிக்க வேண்டும் மேல்பொடவூர் கிராமத்தினர் மனு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டம்,பரந்துாரில், புதிய விமான நிலையத்திற்கு, நிலம் எடுக்கும் பணியை, தமிழக தொழில் துறை பிப்., 24ம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேல்பொடவூர் கிராமத்தில், 93 ஏக்கர் நிலம், 218 பேரிடம் இருந்து வாங்கப்பட உள்ளது. இதற்கு, பொது அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.இவர்கள், 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். இதன் மீதான விசாரணை ஏப்.,4ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து, நாகப்பட்டு, மேல்பொடவூர், ஏகனாபுரம் ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், மேல்பொடவூர் கிராமத்தினர் சிலர், பரந்துார் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நில எடுப்பு அலுவலகத்திற்கு நேற்று சென்று, தனித்தனியாக மனு அளித்தனர். கிராம மக்களின் மனுக்களை, பரந்துார் விமான நிலைய தனி மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பெற்றுக் கொண்டார்.மனு விபரம்:நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மேலும், கையகப்படுத்தும் நிலத்திற்கு, எவ்வளவு இழப்பீடு வழங்குவீர்கள் என, எங்களுக்கு தெரிவித்தால், பேசுவதற்கு சவுகரியமாக இருக்கும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை