உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மொபைல் போன்கள் திருட்டு: இரண்டு பெயின்டர்கள் கைது

மொபைல் போன்கள் திருட்டு: இரண்டு பெயின்டர்கள் கைது

திருப்போரூர் : கேளம்பாக்கத்தில் மொபைல் போன் திருடிய, இரண்டு பெயின்டர்களைப் போலீசார் கைது செய்தனர்.கேளம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில், பயணிகளின் மொபைல் போன்கள் திருடு போவதாக, கேளம்பாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு, சந்தேகத்திற்குரிய முறையில், சுற்றித் திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த ரவிகுமார் மகன் ரஞ்சித், 23, அதே ஊரைச் சேர்ந்த கனதீரன் மகன் ஜீவா, 23, என்பது தெரிய வந்தது. திருப்போரூரில் பெயின்டராக வேலை செய்வதும், வேலையில்லாத நேரத்தில், இருவரும், பஸ்களில் தூங்கும் பயணிகளின், மொபைல் போன்களை திருடியதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த, எட்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை