உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  உத்திரமேரூர் சிறுவர் பூங்காவை சீரமைக்க மக்கள் கோரிக்கை

 உத்திரமேரூர் சிறுவர் பூங்காவை சீரமைக்க மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் -செல்லம்மாள் நகரில், பராமரிப்பின்றி கிடக்கும் சிறுவர் பூங்காவை சீரமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சி, செல்லம்மாள் நகரில், 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 2023ம் ஆண்டில், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 34 லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப் பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த ஓராண்டாக, பூங்கா பராமரிப்பு இல்லாமல், வளாகத்தில் முள் செடிகள், புற்கள் வளர்ந்து வருகின்றன. இங்குள்ள, மின்கம்பங்களில் விளக்கு கள் மற்றும் கேபிள்கள் திருடப்பட்டு உள்ளன. இதனால், இரவு நேரங்களில் சிறுவர், மகளிர், முதியோர் பூங்காவுக்கு வர முடியாத நிலை உள்ளது. பூங்கா பயன்பாட்டில் இல்லாததால், விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து, பல லட்சம் ரூபாய் வீணாகி வருகிறது. எனவே, செல்லம்மாள் நகர் சிறுவர் பூங்காவை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை