| ADDED : பிப் 17, 2024 11:39 PM
ஆற்பாக்கம், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில், ஆற்பாக்கத்தில் உள்ள கல் அரவை ஆலைகளில் தயாரிக்கப்படும் 'எம்-சாண்ட்' எனப்படும் மணல், லாரி வாயிலாக பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.ஆற்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் செல்லும் லாரிகளில் இருந்து சிதறும் எம்-சாண்ட் மணல், ஆற்பாக்கம் ஏரிக்கரை ஒட்டியுள்ள சாலை மற்றும் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் குவியலாக உள்ளது.இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, விபத்தை தவிர்க்கும் வகயைில், சாலையோரம் குவிந்துள்ள எம்-சாண்ட் மணலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.