உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் கால்வாய் பணி செவிலிமேடில் துவக்கம்

மழைநீர் கால்வாய் பணி செவிலிமேடில் துவக்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு எம்.ஜி.ஆர்., நகரில் மழைநீர் வடிகால்வாய் மண் கால்வாயாக இருப்பதால், அடிக்கடி மண் துகள்களாலும், செடி, கொடிகளாலும் கால்வாய் துார்ந்து விடுகிறது.இதனால், மழைக்காலத்தில், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதனால், கான்கிரீட் கால்வாய் கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், மண் கால்வாய் உள்ள பகுதியில், கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதையடுத்து கால்வாயில் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி